search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுய உதவிக் குழு"

    • மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • சுய உதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்று அரங்கு அமைக்க விரும்பினால், வருகிற 20-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர்.உமா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 கண்காட்சிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்தப்படுகிறது.

    தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டி கையை முன்னிட்டு வரு கின்ற வருகிற 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெற வுள்ளது.

    இக்கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள், பாரம்ப ரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள் போன்ற பொருட்களும், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பயன்பாட்டிற்கு கொலு பொம்மைகள், மண் பொம்மைகள், காகித கூழ் பொம்மைகள், விருந்தின ருக்கு வழங்கக் கூடிய நினைவு பரிசு பொருட்க ளான சிறிய சணல் பைகள், பனையோலை பெட்டிகள், சிறிய அளவிலான வண்ண காகித பைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், காட்டன் வேட்டி கள் போன்ற துணி வகைகள், சிவகங்கை மாவட்ட காரைக்குடி பலகாரங்கள் போன்ற தீபாவளி பலகாரங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது

    எனவே நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்று அரங்கு அமைக்க விரும்பினால், வருகிற 20-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை, முதல்-அமைச்சர் தள்ளுபடி செய்து ஆணையிட்டார்.
    • 14,236 பேருக்கு வழங்கப்பட்ட ரூ.43 கோடியே 7லட்சத்து 14 ஆயிரத்து 42 அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் சுய உதவிக் குழுக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கினார்.

    பின்னர், கலெக்டர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-,

    கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம், 31.03.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை, முதல்-அமைச்சர் கடந்த 31.12.2021 அன்று தள்ளுபடி செய்து ஆணையிட்டார்.

    அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களான நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 1,392 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 14,236 உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மொத்தம் ரூ.43 கோடியே 7லட்சத்து 14 ஆயிரத்து 42 அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    சுய உதவிக் குழுக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தற்கான சான்றிதழ்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் லட்சுமணக்குமார், இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர், நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சுபாஷினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • விருதுநகர் மாவட்ட மகளிர் குழுக்களுக்கு ரூ.650 கோடி நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.351.97 கோடி வங்கி கடன்கள் வழங்கப்பட்டது.
    • சுய உதவிக் குழுக்களின் பயனாளிகளுக்கான மானியத்தை வங்கி கணக்கிலேயே வழங்க இணைய தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    விருதுநகர் 

    விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் பயிற்சி கருத்தரங்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்தில், வங்கி களின் பங்கு குறித்தும், வங்கிகள் நிலையான வட்டி வருமானம் மற்றும் முறையாக கடனை செலுத்து வதால் வட்டி மானியம் பெறுவதில் உள்ள தடைகள் அகற்றுவது பற்றியும், கடன் திரும்ப கிடைப்பதில் உள்ள நம்பகத் தன்மை குறித்தும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்குவதற்கான ரிசர்வ் வங்கி விதிமுறை கள் குறித்தும், வங்கியாளர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

    இனி வரும் காலங்களில் தனிநபர் மற்றும் குழுக்கடன் பெறும் சுய உதவிக் குழுக்களின் பயனாளிகளுக்கான மானியத்தை அவர்களது வங்கி கணக்கிலேயே வழங்குவதற்கான இணைய தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்ட த்தில் 2022-23-ம் நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.650 கோடி கடன் உதவிக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்போது வரை ரூ.351.97 கோடி வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் அதிக தொழில்களை நம்பி இருக்கக்கூடிய மாவட்டமாக இருந்து வருகிறது. வங்கியாளர்கள் தகுதியான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2021-22-ம் ஆண்டு அதிக கடன் உதவி வழங்கிய 8 மாவட்ட அளவிலான வங்கிகளுக்கும், 10 மாவட்ட அளவிலான வங்கி கிளைகளுக்கும் பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    • 12 பெண்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும்
    • கலெக்டர் உத்தரவு.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் இயங்கிவரும் உழவர் சந்தையில் பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட மகளிர் குழுவிற்கு உழவர் சந்தையில் காய்கறி கடைகள் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து எப்எப்ஸ்டார் மகளிர் சுய உதவி குழுவிற்கு புதியதாக உழவர் சந்தையில் கடை ஒதுக்கப்பட்டது.

    உழவர் சந்தையில் உள்ளகடையின் திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக இந்தியன் வங்கி மைக்ரோசேட் மேலாளர் சங்கமித்ரா திறந்துவைத்து பேசினார். பிரீடம் பௌண்டேஷன் இயக்குனர் ராமச்சந்திரன் காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள், வேளாண்மைத் துறையினர், கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து சுய உதவி குழுக்களுக்களை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-

    இந்த கடையின் மூலம் 12, பெண்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும் மேலும் பெண்கள் மத்தியில் தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும்.

    இதன் மூலம் அவர்க ளுடைய வாழ்வாதாரம் மேம்படும், இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறையினருக்கு பெண்கள் சுய உதவி குழுக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினர்.

    ×